Sunday 22 September 2013

ஏன் திருமணம் பெண் வீட்டில் திருமணம் நடக்கவேண்டும்??




ஏன் திருமணம் பெண் வீட்டில் திருமணம் நடக்கவேண்டும், காரணம்...??

பதில்: 
முதலில், அதுதான் நம்ம மரபு.. கொங்கு நாட்டின் மரபு.. கொங்கு பதினெட்டு குடிகளுக்கும் பொதுவானது.. கொங்க பிராமணர் முதல் கொங்க பறையர் வரை இதுவே வழக்கம்...

ரெண்டாவது, தற்போது மண்டப திருமணத்தால் போட்டி பொறாமை வளர்ந்துகொண்டே போகிறது...
கல்யாணம் என்பது விளம்பரம் போல ஆகிவிட்டது..
பாரம்பரியம், உறவுகள், சடங்குகள் பின்னே தள்ளபடுகிறது..

நம் பாரம்பரிய திருமண முறையான அருமைகாரர்-மங்கள வாழ்த்து கொண்ட சீர் முறை திருமணம் சிறப்பு..
உறவுகளுக்குள் இணக்கம் வளர வீட்டில் திருமணம் நடத்த வேண்டும்...

உறவுகள் மட்டுமே கூடி எல்லா வேலையும் செய்து எளிமையாக திருமணம் செய்ய வேண்டும்..
வேண்டுமானால் ஊருக்காக நண்பர்களுக்காக சின்ன ரிசப்சன் மண்டபத்தில் வைக்கட்டும்.. திருமணம் என்பது பெண் வீட்டில் தான் நடக்க வேண்டும்...

இதனால் செலவுகள் குறைவு.. உறவுகள் பலப்படும்.. ஒற்றுமை வளரும்.. கல்யான செலவை அந்த ஜோடிக்கு கொடுத்தால் அதை வைத்து அவர்கள் ரெண்டு ஏக்கர காடு வாங்கி விவசாயம் செய்யலாம்...

எனவே விளம்பர திருமணங்களை விடுத்து நம் பாரம்பரிய திருமணத்துக்கு திரும்ப வேண்டும்...


இது சாத்தியமா என்று கேட்க வேண்டாம்.. இன்றும் சமூகத்தில்-நாட்டில் உயர்ந்த நிலையில் இருக்க கூடிய மேற்கு மாநிலங்களில் உள்ள சாதிகள் இதை கடைபிடிக்கிறார்கள்.. தமிழகத்திலும் சோழ தேசத்தில் உள்ள நாட்டுகோட்டை செட்டியார்கள் அவர்கள் வழக்கப்படி ஆண் வீட்டில் தான் இன்றும் திருமணம் செய்கிறார்கள்...

மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும்!

No comments:

Post a Comment