Sunday 22 September 2013

சைவ முறை திருமணம்-புது காளான்


தற்காலங்களில் தமிழ் முறை என்னும் அடைமொழியோடு சில கலாசார திரிபுகளை நம் சமூகத்தில் திணிக்க பார்க்கிறார்கள். அதில் ஒன்றுதான் தமிழ்முறை திருமணம். திராவிட கும்பல் நம் பாரம்பரிய மரபுகளையும் கலாசாரத்தையும் ஒழிக்க கண்டுபிடித்த தாலியறுப்பு திருமணங்கள் என்னும் கன்றாவிக்கும் இந்த தமிழ் முறை திருமணத்திருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.



நம் பாரம்பரிய திருமண முறையான அருமைகாரரை முன்னிறுத்தி மங்கள வாழ்த்து முழங்க, நம் குலகுருக்கள் ஆசி கூற செய்யப்படும் சீர் திருமணங்கள்தான் முறையான கொங்குநாட்டு திருமணம். நம்மை நம் பாரம்பரிய வழக்கங்களில் இருந்து திசை திருப்பி கலாசார அடிமைகளாக்கும் திட்டமே இந்த தமிழ் முறை திருமணங்கள். 

நமது திருமண முறைகள் ஏற்கனவே தமிழ் மொழி கொண்டுதான் செய்யப்படுகிறது. அரசர்களும், பிரபுக்களும் மட்டுமே தமிழ் வளர்த்த காலத்தில் நம் சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ் வளர்த்தோம். கொங்கு புலவனார் என்ற ஒரு சாதியையே ஆதரித்து தமிழ் வளர்த்த சமூகம் கொங்கு சமூகம். இராமாயணமும் மகாபாரதமும் தமிழுக்கு வர காரணமே கொங்கு சமூகம் தான். இன்று முளைத்த காளான்கள் நமக்கு சீர் முறைகளை/தமிழ் வளர்ப்பை சொல்லித்தர வேண்டியதில்லை.

தமிழ் என்னும் அடைமொழியோடு நம்மை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகளை ஒழிப்போம்.பல சூட்சும நுட்பங்களையும், ஆன்மீக சக்தியையும், பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் நம் பாரம்பரிய மரபு திருமணங்களான சீர் திருமணங்களை பின்பற்றுவோம். அதுவே ஆயிரம் ஆயிரம் காலமாக நம் சமூகம் தலைத்து வாழ வழி!

No comments:

Post a Comment