Sunday, 22 September 2013

தாலி அணியாத மணமான பெண்கள்


தாலி அணியாத மணமான பெண்கள்
*******************************
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அணியக்கூடிய மண அடையாளமாக மஞ்சள் கயிறு இருந்தது. பணம் உள்ளோரால் மட்டுமே தங்க செயினில் தாலி கொடி அணிய இயலும். அவர்களுக்கே கஷ்ட சூழல் ஏற்படும்போது அது காணாமல் போகும். ஆகவே, எளியவர்களை மனதில் நிறுத்தி சமூக விழாக்களை அமைத்த மரபை உணர்த்தும் மிக சிறந்த உதாரணம் நமது தாலி கயிறு. ஆனால் தற்காலங்களில் தாலி கயிறை நகர பெண்கள் அணியாது திரிகிறார்கள். தாலியை செயினில் கோர்த்து போடுபவர்களும் மாங்கல்யத்தை மறைத்து போடுகிறார்கள். பெண்கள் அணிவது செயினா தாலியா என்று தெரியாமல் உள்ளது.



இதன் பின்னணி சுவையானது. மேற்கு கலாச்சார மோகமும, கால் சென்டரிலும், மென்பொருள் நிறுவன பணிகளிலும் திருமணம் முடிந்துவிட்டதை மறைக்கும் போக்கு தான் இதன் அடித்தளம். அந்த புற்று நோய் இப்போது மெதுவாக அனைத்து தரப்பையும் சீண்டி பார்க்க துவங்கியுள்ளது. திருமணம் முடிந்துவிட்டது அறிந்தால் சமூகத்தில தங்களுக்கான ஈர்ப்பு/கவர்ச்சி குறைவதாக நவீன யுவதிகள் எண்ணுகிறார்கள் என்று சமீப ஆய்வும் கூறுகிறது. அது மாநகரங்களில் வசிக்கும் நம் கொங்கு பெண்கள் மூலமாக பரவ துவங்கியுள்ளது. அப்படி முதிர்கன்னிகளாக காட்டிகொள்வதில் என்ன கவர்ச்சி என்று தெரியவில்லை. அதையே நம் வீட்டு மூத்த பெண்களும் பின்பற்ற துவங்குவது ஒரு அவலம்.

இதற்கு சிலர் ஆணாதிக்கம் என்னும் சாயம் பூசுகிறார்கள். ஈ.வெ.ரா பல காலமாக தாலி அகற்ற வேண்டும் என்றபோது கேட்காது, இப்போது மட்டும் எப்படி இந்த 'புற்ச்சி' வந்தது..? சிலர் கழுத்து அரிப்பு, ஒவ்வாமை என்கிறார்கள். பல ஆயிரம் வருடமாக அணியபட்டது, வெயிலில் விவசாய வேலை பார்த்தவர்களுக்கு வராத சிரமம் இப்பொது வந்துவிட்டது என்பது நொண்டி சாக்கு.

பதினோராம் நூற்றாண்டில்லேயே திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம். மாங்கல்யசரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது. தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது. தெய்வ திருமணம் முதற்கொண்டு எளியோர் திருமணம் வரை அனைத்து இலக்கிய இதிகாசங்களும் சொல்வது, "மங்கள நாண்" என்பதே. அதாவது மாங்கல்யசரடு (மஞ்சள் நூல்).

ஆன்மீக ரீதியில் பார்த்தாலும் தர்ப்பையையே யாகத்திற்கு பயன்படுத்துவர். அதுபோல, சீர்முறைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பருத்தி கயிரையே அனைவரும் பயன்படுத்த வேண்டும். பூணூல் கூட பருத்தி நூல் கொண்டுதான் செய்கிறார்கள். அந்நாளில் நாடாண்ட அரசர்களும் பூணூல் அணிந்தனர். அவர்களும் நூலை கொண்டே பயன்படுத்தினர். 

தாலி கயிறு என்பது தான் நமக்கு அடயாளம், மரியாதை எல்லாம். தங்க செயின் என்பது போலி கவுரவம் போல. அதுதான் கணவனுக்கு தரும் மரியாதை. தாளிகயிரை அறுப்பதும், துறப்பதும் திராவிட களவாணிகள் செய்யும் செயல்.

என் வகுப்புதோழி (கொங்கு-பங்காளி) சொன்னாள், “தாலி கயிரையே மதிக்காதவள் கணவனை எப்படி மதிப்பாள்; இவளுக்கெல்லாம் இனிசியளுக்கு புருசனா மிச்சர் திங்கறதுக்கு, தூக்குல தொங்கலாம்”. நியாயமான வார்த்தை!

பல பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் தாலிக்கயிறு அணியவில்லைஎனில் சீர் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஏன், சொந்த மகளானாலும் வீட்டுக்குள்ளேயே விட மாட்டார்கள். ஆடம்பரத்தை காட்டும் செயினை விட தெய்வ முறையும், அடையாளத்தையும், மரபையும் காட்டும் மங்கள சரடுக்கு முக்கியத்துவம் தருவோம்.

(Photo Courtesy: AJ Photography)

தாலியின் மரபு




திருமண அடையாளமான தாலி என்பது மஞ்சள் கயிறு தான். கொடிசங்கிலி என்பது வெறும் ஆபரணமே. முன்னாளில் ஊர்கவுண்டர்-பெரியவீட்டுகாரர் திருமணத்தை அங்கீகரித்து தரும் ஓலை மடிக்கப்பட்டு மஞ்சள் கயிறில் கோர்த்து அணியபட்டது. இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன்கட்டியதாக ஆய்வு சொல்கிறது. சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும். அந்த ஓலை சீக்கிரம் இற்று போனதால் கொங்கு குழாலரை கொண்டு தட்டான் செய்து பயன்படுத்தினோம். பின்னர் வசதி பெருக அது தங்கமாக மாறியது. எவ்வளவு மாற்றம் வந்தாலும் மஞ்சள் கயிறு என்பது மாறாததாக இருந்தது. ஏனெனில் அதுவே பாரதம் முழுக்க பெரும்பாலும் அங்கீகரிக்கப்பட்ட மண அடையாளமாக இருந்தது.

வெறும் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை கட்டி பயன்படுத்தினாலும் அது தாலியே. ஆனால் கயிறு இல்லாது மங்கல்யமும், தங்க செயினும் சேர்ந்தது தாலி ஆகாது.அது வெறும் ஆபரணம். அதில் எந்த புனிதமும் அடையாளமும் இல்லை. தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை

சைவ முறை திருமணம்-புது காளான்


தற்காலங்களில் தமிழ் முறை என்னும் அடைமொழியோடு சில கலாசார திரிபுகளை நம் சமூகத்தில் திணிக்க பார்க்கிறார்கள். அதில் ஒன்றுதான் தமிழ்முறை திருமணம். திராவிட கும்பல் நம் பாரம்பரிய மரபுகளையும் கலாசாரத்தையும் ஒழிக்க கண்டுபிடித்த தாலியறுப்பு திருமணங்கள் என்னும் கன்றாவிக்கும் இந்த தமிழ் முறை திருமணத்திருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.



நம் பாரம்பரிய திருமண முறையான அருமைகாரரை முன்னிறுத்தி மங்கள வாழ்த்து முழங்க, நம் குலகுருக்கள் ஆசி கூற செய்யப்படும் சீர் திருமணங்கள்தான் முறையான கொங்குநாட்டு திருமணம். நம்மை நம் பாரம்பரிய வழக்கங்களில் இருந்து திசை திருப்பி கலாசார அடிமைகளாக்கும் திட்டமே இந்த தமிழ் முறை திருமணங்கள். 

நமது திருமண முறைகள் ஏற்கனவே தமிழ் மொழி கொண்டுதான் செய்யப்படுகிறது. அரசர்களும், பிரபுக்களும் மட்டுமே தமிழ் வளர்த்த காலத்தில் நம் சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் தமிழ் வளர்த்தோம். கொங்கு புலவனார் என்ற ஒரு சாதியையே ஆதரித்து தமிழ் வளர்த்த சமூகம் கொங்கு சமூகம். இராமாயணமும் மகாபாரதமும் தமிழுக்கு வர காரணமே கொங்கு சமூகம் தான். இன்று முளைத்த காளான்கள் நமக்கு சீர் முறைகளை/தமிழ் வளர்ப்பை சொல்லித்தர வேண்டியதில்லை.

தமிழ் என்னும் அடைமொழியோடு நம்மை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகளை ஒழிப்போம்.பல சூட்சும நுட்பங்களையும், ஆன்மீக சக்தியையும், பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் நம் பாரம்பரிய மரபு திருமணங்களான சீர் திருமணங்களை பின்பற்றுவோம். அதுவே ஆயிரம் ஆயிரம் காலமாக நம் சமூகம் தலைத்து வாழ வழி!

ஏன் திருமணம் பெண் வீட்டில் திருமணம் நடக்கவேண்டும்??




ஏன் திருமணம் பெண் வீட்டில் திருமணம் நடக்கவேண்டும், காரணம்...??

பதில்: 
முதலில், அதுதான் நம்ம மரபு.. கொங்கு நாட்டின் மரபு.. கொங்கு பதினெட்டு குடிகளுக்கும் பொதுவானது.. கொங்க பிராமணர் முதல் கொங்க பறையர் வரை இதுவே வழக்கம்...

ரெண்டாவது, தற்போது மண்டப திருமணத்தால் போட்டி பொறாமை வளர்ந்துகொண்டே போகிறது...
கல்யாணம் என்பது விளம்பரம் போல ஆகிவிட்டது..
பாரம்பரியம், உறவுகள், சடங்குகள் பின்னே தள்ளபடுகிறது..

நம் பாரம்பரிய திருமண முறையான அருமைகாரர்-மங்கள வாழ்த்து கொண்ட சீர் முறை திருமணம் சிறப்பு..
உறவுகளுக்குள் இணக்கம் வளர வீட்டில் திருமணம் நடத்த வேண்டும்...

உறவுகள் மட்டுமே கூடி எல்லா வேலையும் செய்து எளிமையாக திருமணம் செய்ய வேண்டும்..
வேண்டுமானால் ஊருக்காக நண்பர்களுக்காக சின்ன ரிசப்சன் மண்டபத்தில் வைக்கட்டும்.. திருமணம் என்பது பெண் வீட்டில் தான் நடக்க வேண்டும்...

இதனால் செலவுகள் குறைவு.. உறவுகள் பலப்படும்.. ஒற்றுமை வளரும்.. கல்யான செலவை அந்த ஜோடிக்கு கொடுத்தால் அதை வைத்து அவர்கள் ரெண்டு ஏக்கர காடு வாங்கி விவசாயம் செய்யலாம்...

எனவே விளம்பர திருமணங்களை விடுத்து நம் பாரம்பரிய திருமணத்துக்கு திரும்ப வேண்டும்...


இது சாத்தியமா என்று கேட்க வேண்டாம்.. இன்றும் சமூகத்தில்-நாட்டில் உயர்ந்த நிலையில் இருக்க கூடிய மேற்கு மாநிலங்களில் உள்ள சாதிகள் இதை கடைபிடிக்கிறார்கள்.. தமிழகத்திலும் சோழ தேசத்தில் உள்ள நாட்டுகோட்டை செட்டியார்கள் அவர்கள் வழக்கப்படி ஆண் வீட்டில் தான் இன்றும் திருமணம் செய்கிறார்கள்...

மாற்றம் நம்மில் இருந்து துவங்க வேண்டும்!

தாலியின் தொண்மை வரலாறு


தாலி என்னும் வார்த்தை தாள-தாழ என்னும் சொல்லிலிருந்து வந்தது. தாளம் என்றால் பனை. 


(தாளவாடி - பனைமரங்கள் அதிகம் உள்ள பகுதி; திருப்'பனங்காடு' -தாளவனம்,தெய்வம் தாளபுரீஸ்வரர்; தாள விலாசம் என்னும் பழமையான நூல் பனையை பற்றிய செய்திகளை சொல்லும் நூல்.Toddy ~ தாடி - கள்ளு. தாடிக்கொம்பு திண்டுக்கல் அருகே
உள்ள ஊர். Talipot Palm என்று ஒரு வகை பனையை வெள்ளையர்களும் குறிக்கிறார்கள். சங்க கால கன்னட மொழியிலும் தாழம் என்றால் பனைமரமே.)



பனைக்கும் தாலிக்கும் என்ன தொடர்பு?

கொங்கு திருமணம் என்பது சொந்தங்களுக்காக-ஊருக்காக செய்யபடுவது மட்டுமே அல்ல. கொங்கு நாட்டு அரசனான சேரனிடம் அங்கீகாரம் பெறவே திருமணம். கொங்க தேசத்தில் 24 நாடுகள் உண்டு. இருபத்திநாலு நாட்டுக்கும் 24 பட்டகாரர்கள் உண்டு. சேரனின் பிரதிநிதிகளாக 24 பட்டகாரரும் வந்திருந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இன்றும் அதன் அடையாளமாகத்தான் 24 நாட்டு கற்களை திருமண சடங்கில் வைப்பார்கள். ஒரு பட்டகாரன் வந்தாலும் அதில் ஒன்றை குறைத்து விடலாம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு பனையோலையில் இன்னாருக்கு இன்னார் முன்னிலையில் திருமணம் நடந்தது என்பதை எழுதி அதில் சேரனின் பிரதிநிதிகள் கையெழுத்திடுவர். அதை மடித்து இப்போது உள்ள தாலி வடிவில் ஒரு மஞ்சள் கயிற்றில் மாப்பிள்ளை கட்டிவிடுவார். பனை ஓலை நீரில் நனைய இற்று விடுவதால் அதை பின்னர் அரக்கிலும், குயவன் செய்து தந்த தட்டானிலும் (சுட்ட மண்) செய்து பின்னர் தங்கத்திற்கு மாறினர். எனவே தாலி என்பது வெறும் திருமண அடையாளம் என்பதை தாண்டி பாரம்பரியத்தின் அடையாளம்-வரலாற்று சின்னம்-புராதனத்தின் நினைவு. நம் நாட்டின் கற்பு நெறிக்கும் 
ஒழுக்க வாழ்வுக்கும் ஒரு முத்திரை. திருமாங்கல்யம் என்பது காலத்தில் மாரியதுண்டு, ஆனால் மஞ்சள் நிற பருத்தி நூலே காலம் காலமாக திருமண அடையாளமாக இருந்து வருகிறது. பாரத நாடு முழுக்க சாமானிய குடிமகனின் மனைவி முதல் அரசனின் மனைவி வரை அனைவருக்கும் பொதுவான பெருமைமிகு மங்கள அடையாளம் தாலி. ஏன், தெய்வங்களுக்கும் இது பொருந்தும். தாலி அணியாத மணமான பெண் தெய்வம் எதுவும் கிடையாது.

பிராமணர்களும் இன்னும் சில சாதிகளும் பூநூலுக்கு பருத்தியையே பயன்படுத்துவதை போல தாலியும் பருத்தி நூலிலேயே கட்டப்படும். இது பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தாண்டி அனைவராலும் அணிய கூடியது.

மண அடையாளம் என்பது எல்லா மதத்திலும் எல்லா நாட்டிலும் உண்டு. தாலியை மண அடையாளம் என்பதை தாண்டி பாரம்பரியத்தின்/கலாசாரத்தின் அடையாளம். தாலியை அழிக்க வேண்டுமெனில் அனைத்து புராதன சின்னங்களையும் கட்டிடங்களையும் அழிக்க வேண்டும். இதெல்லாம் பாரத பாரம்பரியத்தை அழித்து தங்கள் மதம் பரப்ப - ஆட்சியை நிறுவ வெளிநாட்டு மதமாற்ற சக்திகள் செய்யும் கட்டமைக்கப்பட்ட சதியில் ஒன்று. இதற்க்கு பெண் விடுதலை-இந்து மத எதிர்ப்பு என்ற முகமூடி மாட்டி பெண்களை ஏமாளிகள் என்று நினைத்துவிட்டனர். மெக்ஸிகோ போல நாட்டின் கலாசாரத்தை பூர்வகுடிகளை அடையாளமற்றவர்களாக்கி ஆள்வது வேரில் இருந்து விஷத்தை வைப்பது போல.

மற்றவர்களை விட, கொங்கதேச மக்களுக்கு தாலி மேல் அதிக உரிமை உண்டு. 

ஏனெனில் பனை கொங்க(சேர) தேசத்தின் தேசிய மரம்! நீர்வளம் குறைவான நம் கொங்க தேசத்தின் பெரும்பகுதிகளில் பனை மரமே தகுந்தது! எனவே பெண்ணியம் என்ற மாய வலையில் சிக்கி நம் பெருமையை நாமே அழித்துகொள்ளாமல் குலம் காக்கும் கொங்கு பெண்கள் அனைவரும் தாலியை அணிந்து வெளிநாட்டு மத மாற்றிகளின் கைக்கூலிகளான திராவிட-முற்போக்கு கிறுக்கர்கள் முகத்தில் கரி பூச வேண்டும்!

கலப்பு - காம வெறி - காதல் - கள்ள திருமணம்



'கலப்பு திருமணம்' எனப்படும் முறையற்ற வகையில் திருட்டுத்தனமாக கள்ள திருமணம் செய்வோர் சிந்திக்க சில யதார்த்த உண்மைகள்.. (சொந்த சாதி காதல் திருமணத்தில் இங்கு குறிப்பிட்ட விஷயங்களில் பெரும்பான்மை பிழைகள் நடப்பதில்லை)



• எந்த சாதியாக இருப்பினும் நீங்கள் காதலை ஒப்புக்கொண்ட நிமிடம் பெற்றோரின் நம்பிக்கையை உடைத்து துரோகம் செய்கிறீர்கள். திருமணம் முடியும் வரை கள்ளத்தனமாக பெற்றோரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்.

• திருட்டுகல்யானம் செய்து கொண்டவுடன், உங்கள் பெற்றோரை காவல் நிலையம்-ரிஜிஸ்தர் ஆபிஸ் போன்ற இடங்களில் குற்ற உணர்வோடு கூனி குறுகி அரை உயிராக நிற்க பார்ப்பீர்கள். பலர் பார்க்க அவர்கள் உங்கள் காலிலும், உங்கள் காதலன் காலிலும் விழுவதை காணலாம். அரசு அதிகாரிகள் தரக்குறைவாக உங்கள் பெற்றோரை விமர்சிப்பதையும், உடன்வந்தோர் கேவலபார்வையும் சிரிப்பும் போனஸ்.

• அவர்கள் வாழ்வின் அர்த்தம் தவிடுபொடியாகும். உங்கள் முன்னோர் முதல் உங்கள் தந்தை-தாய் வழி உறவுகள் வரை காத்து வந்த மரியாதை கவுரவம் காவு வாங்கப்படும். உங்கள் பெற்றோர் ஊனுருக்கி-உயிருருக்கி உங்கலுக்கும் உங்கள் வாரிசுகளுக்கும் சம்பாதித்த சொத்து எவனோ ஒருவனால் கையாட படும். (இன்று சொத்துக்காக திட்டமிட்டு பணமோ-நிலமோ உள்ள வீட்டு பெண்களே குறிவைத்து காதலிக்கபடுகிரார்கள்)

• உங்கள் பெற்றோரின் வாழ்க்கை உங்கள் கள்ள திருமணத்தின் பின்? ஏற்று கொண்டாலுமே கூட.. நடை பிணமாக.. எந்த விசெஷத்திலும் கலந்துகொள்ள முடியாது.. கலந்து கொண்டாலும் குற்ற உணர்வோடு வெளியில் சொல்ல இயலாது மனதில் புழுங்கி.. நரகம்!

• கள்ள திருமணம் செய்துகொண்டால் உங்கள் பெற்றோர் சாவை பார்க்கலாம். 12% பெற்றோர் சராசரியாக இறந்துவிடுகிரார்கள். மாரடைப்பு-ரத்தகொதிப்பு, தூக்கு, விஷம், தீக்குளிப்பு போன்றவை அதிகம் நடப்பவை. சிலர் குடும்பத்தோடு சாவை தழுவுகிறார்கள்.

• ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட பெண்கள் 7% தற்கொலை செய்துகொள்கிறார்கள். திருட்டு கல்யாணத்தின் பின் கொடுமை, தாழ்வாக நடத்தபடல், திருட்டு கல்யாண கணவன்(திருடன்) கைவிட்டதால் பெற்றோர் ஆதரவும் இல்லாமை, பெற்றோர் சாவால் குற்ற உணர்வு மேலோங்குதல் போன்ற காரணங்கள். இந்த கணக்கில் விபசாரத்திற்கு சென்ற பெண்களும், கடத்தி விற்கப்பட்ட பெண்களும் கணக்கில் வரவில்லை!

• உணர்ச்சிவசப்பட்டு உங்களை கொலை செய்தாலும், உங்கள் காதலன்-காதலியை கொலை செய்தாலும் குடும்பமே சிதைத்து விடுகிறது. போராட்டத்தில் சில சமயம் பெற்றோரும் கொல்லபடுவதுண்டு.

• கள்ள திருமணம் செய்துகொண்ட பெண்கள் 80% பேர் விவாகரத்து பெறுகிறார்கள். நடக்கும் திருமணங்களில் பெற்றோர் நிச்சயித்த சீர் திருமணம் 95% நடக்கிறது. காதல் திருட்டு கல்யாணம் 5% நடக்கிறது. எனவே 95% திருமணம் மூலம் வரும் விவாகரத்தின் எண்ணிக்கையை 5% திருமணங்களோடு ஒப்பிட முடியாது. ஒப்பீட்டளவில் ஒரே எண்ணிக்கையை தான் காட்டும். அதாவது 100 பேரில் சீர் திருமணம் 95%, அதில் வெறும் 5% தோல்வி என்றாலே 5 பேர் வரும். திருட்டு கல்யாணம் 5% அதாவது 5 பேரில் 80% தோல்வி என்றால் 4 பேர்தான். எனவே எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பீடு தவறு, சதவீத அடிப்படையில் ஒப்பீடு தேவை!


• உங்கள் விவாகரத்தின் பின் உங்கள் பிள்ளை மன நோயாளி. உங்கள் பெற்றோரும் நீங்களும் கூட. தற்கொலை தவிர நல்ல வழி இருக்காது என தோன்றும். சமூகத்தின் காம பார்வை, சீண்டல், ஏளனம், நிராகரிப்ப்பு, ஆதரவின்மை, தனிமை போன்றவை துரத்தும்.

• திருட்டு கல்யாணம் முடித்து சொந்த ஊர் அல்லாது எங்கு சென்றாலும் அங்கும் தாழ்வாகத்தான் நடத்தபடுவீர்கள். சமூக ஆதரவென்பதே இருக்காது. உங்களின் சொந்த உறவுகளும் உங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ நிராகரிக்க துவங்குவார்கள். உறவுகளுக்காக பிச்சை எடுக்க வேண்டி வரும். அப்படி யாரேனும் ஆதரவளித்தாலும் ஏதோ சலுகை செய்வது போலத்தான் இருக்கும். அதில் உரிமையோ பாசமோ இராது.

• உங்கள் கணவர் வீட்டில் ஏற்றுகொன்டாலும் திருட்டுத்தனமாக வந்தவர் என்னும் கண்ணோட்டத்தில் நடத்தபடுவீர்கள். உங்கள் புகுந்த வீட்டில் சரியான மரியாதை இருக்காது. உங்கள் பெற்றோரும் நீங்களும் அடிக்கடி குத்திகாட்டபடுவீர்கள்.

• உங்கள் மூலமே சொத்துக்காக உங்கள் பெற்றோர் மீது வழக்கு நடத்தப்படும்.

• உங்களால் உங்கள் முன்னோர், உங்கள் தாத்தா முதல் உங்கள் பேரன் வரை அவமானப்பட வேண்டும். உங்கள் உடன் பிறந்தோர், உங்கள் தாய் வழி உறவுகள் என நேரடியாகவும் மறைமுகமாகவும் அவமான-நிராகரிப்புக்கு உள்ளாவோர் ஏராளம்!

• எவனோ ஒருவன் சாதி ஒழிப்பு புரட்சி செய்ய-காமபசி தணிக்க-சாதி பழிவாங்க-சொத்து சேர்க்க இவ்வளவு துன்பங்கள் தேவையா..?

• உங்கள் பெற்றோர் துன்பத்தை மதிக்காது உங்களை திருமணம் செய்ய நிர்பந்திப்பவன் நாளை உங்களுக்கு இதுபோல துன்பம் வரும்போது உங்கள் பெற்றோர் மீது காட்டிய உதாசீனம் உங்கள் மேல் வராது என்பதற்கு என்ன நிச்சயம்..? இரக்கமற்றவன் மனதில் உண்மை காதல் இருக்காது நாடக காதலே இருக்கும்!

•இன்று நடக்கும் காதல் திருமணங்களில் 85% சில இயக்கங்களால் திட்டமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருபவை. உள்ளூர் மணியாரனை கூட அறியாதவனுக்கு ஆதரவாக சென்னையில் இருந்து வக்கீல்கள் வருவர். இதன் பின்னணி என்ன..? சிந்தியுங்கள்!

நம் பெற்றோர் நமக்காகவே வாழ்பவர்கள். நம் விருப்பத்திற்கு மாறாக வாழ்க்கை துணையை நிர்பந்திக்க மாட்டார்கள். அன்பை அடிப்படையாக கொண்ட காதல் பிறரை காயப்படுத்தி அதன் மேல் வாழ்க்கையை அமைத்துகொள்ளாது. அதிலும் உயிர் தந்து பெற்று வளர்த்தவர் பிணங்களின் மீதுதான் வாழ்க்கை அமைக்கவேண்டுமா..? மனதை கொஞ்சம் சாந்தபடுத்தி புத்தியை கொண்டு சிந்தியுங்கள். உங்கள் மனதில் உங்கள் குழந்தை பருவம் தொட்டு பெற்றோரின் நினைவுகளை கொஞ்சம் ஓடவிட்டு பாருங்கள். பின்னர் முடிவு செய்யுங்கள்!

கார்ப்பரேட் அருமைகாரர்



கொங்கு திருமணங்களை சரியாகவும் முறையாகவும் செய்வதென்றால் அது அருமை பெரியவர் என்று சொல்லப்படும் அருமைக்காரரை கொண்டே செய்யப்பட வேண்டும். அது முறையாக சில சாங்கியங்கள் செய்து நடைபெற வேண்டும். கொங்கு திருமணங்கள் பாரம்பரிய முறையில் நடந்தால் தற்போது ஆகும் செலவில் ஐந்து மடங்கு குறைவாக செய்யலாம். 
அருமைகாரர் என்பவர் சமூகத்துக்கு ஒரு ரோல் மாடல் போலாகும். அவர்கள் திருமணம் செய்து வைக்கும்போது வெற்றிலை பாக்கு கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அருமைக்காரர்கள் யாருக்கும் தழை வணங்க மாட்டார்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள். பாரம்பரிய கொங்கு சமூகத்தில் பணத்திற்கு கொடுப்பதை விட ஒழுக்கத்திற்கும் பண்பிற்கும் தான் முதல் மரியாதை என்பதற்கு அருமைகாரர் முறை சிறந்த உதாரணம் ஆகும். கார்த்தி-ரஞ்சனி திருமணத்தில் அருமைகாரரை அவமரியாதையாக நடிகர் சிவகுமார் அதிகாரத்தோடு பேசியதால், அந்த இடத்திலேயே அருமைகாரர் சிவகுமாரை (மொடக்குறிச்சி பொன்னுசாமி கவுண்டர்-தூரன் கூட்டம்) பிடித்து வாங்கு வாங்கு என வாங்கிவிட்டார். அந்த கோபத்தில் தான் நடிகர் சிவகுமார் தனது மகன் திருமணத்தில் கொங்கு பாரம்பரியம் இல்லாத திடீரென முளைத்த 'தமிழ் முறை' என்னும் புது வகையில் திருமணம் செய்தார் - கொங்கு பாரம்பரியம் கேட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம். என்னே நல்லெண்ணம்! 

அருமைகாரர்கள் பற்றாகுறை, பல வேலைகளை விட்டு வந்து செய்யவேண்டிய பொருளாதார சூழலால் சில அருமைக்காரர்கள் பணம் பெறுகிறார்கள். அப்படியே பணம் பெற்றாலும் அவர்கள் முறையாக சீர்களை செய்து திருமணம் செய்து வைப்பார்கள். 

ஆனால தற்போது இந்த தமிழ் முறை திருமண கும்பலையும் மிஞ்சும் வண்ணம் புதிதாக சிலர் கிளம்பியுள்ளனர். அதாவது நீங்கள் எப்படி திருமணம் செய்தாலும் அதற்கு தகுந்தது போல சடங்குகளை திரித்து வளைத்து பாஸ்ட் புட் போல மாற்றி தருவர். ஒரு புறம தமிழ் முறை கும்பல் பாட்டு பாட ஒரு புறம இவர், இவரின் சவுகரியத்துக்கு சடங்குகளை கூட்டியும் குறித்தும் டைலர் போல வேட்டி ஒட்டி கத்தரித்து நடத்தி தருவார். பாரம்பரிய முறைகள் எங்கு, எப்படி போனால் என்ன..??

ரிசப்சனுக்கெல்லாம் சாங்கியம் செய்ய யார் சொல்லி தந்தனர் என்று தெரியவில்லை! தெய்வ விக்கிரகங்களை திருமண இடத்தில் கொண்டு வரலாமா என்பதை யார் முடிவு செய்தார்கள்..? இது சிவ சாபத்துக்கு வழி வகுக்காது என்பதை இவரால் சொல்ல முடியுமா..? 

இவருக்கு அருமை கொடுத்த அருமை பெரியவர் பார்த்தால் கண்ணில் இரத்த கண்ணீர் விடுவார். பேப்பரில் விளம்பரம் தந்து அருமை செய்யும் கார்ப்பரேட் அருமைகாரர்கள் பாரம்பரியம் உள்ள நல்ல கொங்கு குடும்பங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள்.

முறையாக திருமணம் செய்ய நினைக்கும் கவுண்டர்கள் வயதும் அனுபவமும் பெற்ற நல்ல அருமைகாரர்களிடம் பொறுப்பை தரவும். கார்ப்பரேட் அருமைகாரர்கள் திடீர் பணக்காரர்களுக்கும், எப்படியும் வாழலாம் என்று பணத்துக்காக பசுவை கொல்லும்-கடத்தும் மொண்ணை கவுண்டர்கள் போன்ற ஆட்களுக்கு தான் சரியாக வருவர்.

புனிதமான அருமைகாரர் பணியை தொழில் போல செய்வதையும், பாரம்பரியத்தை திரிப்பதையும் இன உணர்வுள்ள ஒரு கவுண்டனாலும் சகித்து கொள்ள முடியாது!