Sunday 22 September 2013

தாலி அணியாத மணமான பெண்கள்


தாலி அணியாத மணமான பெண்கள்
*******************************
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அணியக்கூடிய மண அடையாளமாக மஞ்சள் கயிறு இருந்தது. பணம் உள்ளோரால் மட்டுமே தங்க செயினில் தாலி கொடி அணிய இயலும். அவர்களுக்கே கஷ்ட சூழல் ஏற்படும்போது அது காணாமல் போகும். ஆகவே, எளியவர்களை மனதில் நிறுத்தி சமூக விழாக்களை அமைத்த மரபை உணர்த்தும் மிக சிறந்த உதாரணம் நமது தாலி கயிறு. ஆனால் தற்காலங்களில் தாலி கயிறை நகர பெண்கள் அணியாது திரிகிறார்கள். தாலியை செயினில் கோர்த்து போடுபவர்களும் மாங்கல்யத்தை மறைத்து போடுகிறார்கள். பெண்கள் அணிவது செயினா தாலியா என்று தெரியாமல் உள்ளது.இதன் பின்னணி சுவையானது. மேற்கு கலாச்சார மோகமும, கால் சென்டரிலும், மென்பொருள் நிறுவன பணிகளிலும் திருமணம் முடிந்துவிட்டதை மறைக்கும் போக்கு தான் இதன் அடித்தளம். அந்த புற்று நோய் இப்போது மெதுவாக அனைத்து தரப்பையும் சீண்டி பார்க்க துவங்கியுள்ளது. திருமணம் முடிந்துவிட்டது அறிந்தால் சமூகத்தில தங்களுக்கான ஈர்ப்பு/கவர்ச்சி குறைவதாக நவீன யுவதிகள் எண்ணுகிறார்கள் என்று சமீப ஆய்வும் கூறுகிறது. அது மாநகரங்களில் வசிக்கும் நம் கொங்கு பெண்கள் மூலமாக பரவ துவங்கியுள்ளது. அப்படி முதிர்கன்னிகளாக காட்டிகொள்வதில் என்ன கவர்ச்சி என்று தெரியவில்லை. அதையே நம் வீட்டு மூத்த பெண்களும் பின்பற்ற துவங்குவது ஒரு அவலம்.

இதற்கு சிலர் ஆணாதிக்கம் என்னும் சாயம் பூசுகிறார்கள். ஈ.வெ.ரா பல காலமாக தாலி அகற்ற வேண்டும் என்றபோது கேட்காது, இப்போது மட்டும் எப்படி இந்த 'புற்ச்சி' வந்தது..? சிலர் கழுத்து அரிப்பு, ஒவ்வாமை என்கிறார்கள். பல ஆயிரம் வருடமாக அணியபட்டது, வெயிலில் விவசாய வேலை பார்த்தவர்களுக்கு வராத சிரமம் இப்பொது வந்துவிட்டது என்பது நொண்டி சாக்கு.

பதினோராம் நூற்றாண்டில்லேயே திருமணச் சின்னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம். மாங்கல்யசரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது. தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது. தெய்வ திருமணம் முதற்கொண்டு எளியோர் திருமணம் வரை அனைத்து இலக்கிய இதிகாசங்களும் சொல்வது, "மங்கள நாண்" என்பதே. அதாவது மாங்கல்யசரடு (மஞ்சள் நூல்).

ஆன்மீக ரீதியில் பார்த்தாலும் தர்ப்பையையே யாகத்திற்கு பயன்படுத்துவர். அதுபோல, சீர்முறைகளால் ஆசீர்வதிக்கப்பட்ட பருத்தி கயிரையே அனைவரும் பயன்படுத்த வேண்டும். பூணூல் கூட பருத்தி நூல் கொண்டுதான் செய்கிறார்கள். அந்நாளில் நாடாண்ட அரசர்களும் பூணூல் அணிந்தனர். அவர்களும் நூலை கொண்டே பயன்படுத்தினர். 

தாலி கயிறு என்பது தான் நமக்கு அடயாளம், மரியாதை எல்லாம். தங்க செயின் என்பது போலி கவுரவம் போல. அதுதான் கணவனுக்கு தரும் மரியாதை. தாளிகயிரை அறுப்பதும், துறப்பதும் திராவிட களவாணிகள் செய்யும் செயல்.

என் வகுப்புதோழி (கொங்கு-பங்காளி) சொன்னாள், “தாலி கயிரையே மதிக்காதவள் கணவனை எப்படி மதிப்பாள்; இவளுக்கெல்லாம் இனிசியளுக்கு புருசனா மிச்சர் திங்கறதுக்கு, தூக்குல தொங்கலாம்”. நியாயமான வார்த்தை!

பல பாரம்பரியம் மிக்க குடும்பங்களில் தாலிக்கயிறு அணியவில்லைஎனில் சீர் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஏன், சொந்த மகளானாலும் வீட்டுக்குள்ளேயே விட மாட்டார்கள். ஆடம்பரத்தை காட்டும் செயினை விட தெய்வ முறையும், அடையாளத்தையும், மரபையும் காட்டும் மங்கள சரடுக்கு முக்கியத்துவம் தருவோம்.

(Photo Courtesy: AJ Photography)

No comments:

Post a Comment