சொந்தங்களே.. பாரம்பரியமாக நம்ம கொங்கு திருமணங்கள் பெண் வீட்டில் தான் நடக்கும். முக்கிய உறவுகள் வந்திருந்து அவர்களே சமைத்து பரிமாறி முறையாக அனைத்து சீர்களும் செய்து திருமணம் நடத்துவர். இதில் பாசமும் பந்தமும் உறுதியானது.
தற்போது பாஸ்ட் புட் கலாசாரம் போல சீர்கள் இன்றி அவசரடி கல்யாணங்கள் அங்காங்கே நடக்கின்றன. இவையெல்லாம் கல்யாணம் என்றே முதலில் சொல்ல கூடாது. கோவில்களில் திருமணம் செய்தல் கூடவே கூடாது (அது மிக பெரிய பாவம்). இதிலும் குறிப்பாக ஒரு விஷயத்தை சொல்வதென்றால் பப்பே முறை. தட்டை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று பிச்சை கேட்பதுபோல அருவருப்பாக நின்று கொண்டிருப்பது மிகவும் அவமானகரமான விஷயம். இது வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான கலாசாரம். அதோடு நின்று கொண்டு சாப்பிடுவது ஆரோக்கியமும் அல்ல.
திருமணங்களில் பந்தி விடுவது நம் சொந்தங்களே செய்ய வேண்டும். இப்போது கூட்டம் அதிகமாக வருவதால் வெளியாட்கள் பரிமாறினால் குறைந்தபட்சம் 'பந்தி விசாரித்தல்' என்னும் கேட்டு பரிமாறுதல் நிச்சயமாக செய்ய வேண்டும். அதுவே கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு நாம் செய்யும் விருந்தோம்பல். அதை விட்டுவிட்டு மேக் அப் போடவும், போட்டோ எடுக்கவும் ஓடிக்கொண்டிருப்பது அழகல்ல.
சீர் செய்து திருமணம் செய்வதே சரியான முறை. நெருங்கிய உறவினர்களை அழைத்து முறையாக சீர் செய்து திருமணம் செய்ய மிக குறைந்த செலவே ஆகும். வேண்டுமாயின் பெண்வீட்டில் திருமணம் முடித்த பின்னர் ரிசப்சனை ஏதாவது மண்டபத்தில் பெரிதாக செய்து கொள்ளுங்கள்.
நல்ல பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர்கள் பப்பே வில் சாப்பிட விரும்பாமல் வெறும் வெற்றிலை மட்டும் போட்டுகொண்டு சென்று கொண்டிருப்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
முறையாக பந்திபோட்டு உணவு பரிமாறுவோம். நம் சொந்தங்களை கொண்டே உணவு பரிமாற்ற செய்வோம். குறைந்தபட்சம் பந்தி விசாரிப்புக்காவது திருமண வீட்டார் முன்னால் நின்று சொந்தங்களை கவனிப்போம்..!
சாதக பாதகம்: இதில் உணவு மிச்சமாவதாக நிறைய பேர் நினைக்கிறார்கள். அது தவறு. காண்டிராக்டர் தட்டு கணக்கு வைத்து சமைக்கிறார். அதை அவர் அனுபவத்தில் எப்டி செய்யவேண்டுமோ செய்து தனக்கு லாபம் வரும்படி பார்த்து கொள்கிறார். இதனால் நம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. இது பந்தி போட்டு பரிமாரினாலும் இதே செலவுதான். வேண்டாமேன்போர் இலையில் வைக்கும் போதே வேண்டாம் என்றுவிடுவர். எனவே இந்த பிச்சை எடுக்கும் சீர்கேட்டை நம் சமூகத்தில் இருந்து ஒழிப்போம் சொந்தங்களே!
No comments:
Post a Comment