கொங்கு திருமணங்களை சரியாகவும் முறையாகவும் செய்வதென்றால் அது அருமை பெரியவர் என்று சொல்லப்படும் அருமைக்காரரை கொண்டே செய்யப்பட வேண்டும். அது முறையாக சில சாங்கியங்கள் செய்து நடைபெற வேண்டும். கொங்கு திருமணங்கள் பாரம்பரிய முறையில் நடந்தால் தற்போது ஆகும் செலவில் ஐந்து மடங்கு குறைவாக செய்யலாம்.
அருமைகாரர் என்பவர் சமூகத்துக்கு ஒரு ரோல் மாடல் போலாகும். அவர்கள் திருமணம் செய்து வைக்கும்போது வெற்றிலை பாக்கு கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அருமைக்காரர்கள் யாருக்கும் தழை வணங்க மாட்டார்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தரத்தில் வைத்து பார்க்கப்பட வேண்டியவர்கள். பாரம்பரிய கொங்கு சமூகத்தில் பணத்திற்கு கொடுப்பதை விட ஒழுக்கத்திற்கும் பண்பிற்கும் தான் முதல் மரியாதை என்பதற்கு அருமைகாரர் முறை சிறந்த உதாரணம் ஆகும். கார்த்தி-ரஞ்சனி திருமணத்தில் அருமைகாரரை அவமரியாதையாக நடிகர் சிவகுமார் அதிகாரத்தோடு பேசியதால், அந்த இடத்திலேயே அருமைகாரர் சிவகுமாரை (மொடக்குறிச்சி பொன்னுசாமி கவுண்டர்-தூரன் கூட்டம்) பிடித்து வாங்கு வாங்கு என வாங்கிவிட்டார். அந்த கோபத்தில் தான் நடிகர் சிவகுமார் தனது மகன் திருமணத்தில் கொங்கு பாரம்பரியம் இல்லாத திடீரென முளைத்த 'தமிழ் முறை' என்னும் புது வகையில் திருமணம் செய்தார் - கொங்கு பாரம்பரியம் கேட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம். என்னே நல்லெண்ணம்!
அருமைகாரர்கள் பற்றாகுறை, பல வேலைகளை விட்டு வந்து செய்யவேண்டிய பொருளாதார சூழலால் சில அருமைக்காரர்கள் பணம் பெறுகிறார்கள். அப்படியே பணம் பெற்றாலும் அவர்கள் முறையாக சீர்களை செய்து திருமணம் செய்து வைப்பார்கள்.
ஆனால தற்போது இந்த தமிழ் முறை திருமண கும்பலையும் மிஞ்சும் வண்ணம் புதிதாக சிலர் கிளம்பியுள்ளனர். அதாவது நீங்கள் எப்படி திருமணம் செய்தாலும் அதற்கு தகுந்தது போல சடங்குகளை திரித்து வளைத்து பாஸ்ட் புட் போல மாற்றி தருவர். ஒரு புறம தமிழ் முறை கும்பல் பாட்டு பாட ஒரு புறம இவர், இவரின் சவுகரியத்துக்கு சடங்குகளை கூட்டியும் குறித்தும் டைலர் போல வேட்டி ஒட்டி கத்தரித்து நடத்தி தருவார். பாரம்பரிய முறைகள் எங்கு, எப்படி போனால் என்ன..??
ரிசப்சனுக்கெல்லாம் சாங்கியம் செய்ய யார் சொல்லி தந்தனர் என்று தெரியவில்லை! தெய்வ விக்கிரகங்களை திருமண இடத்தில் கொண்டு வரலாமா என்பதை யார் முடிவு செய்தார்கள்..? இது சிவ சாபத்துக்கு வழி வகுக்காது என்பதை இவரால் சொல்ல முடியுமா..?
இவருக்கு அருமை கொடுத்த அருமை பெரியவர் பார்த்தால் கண்ணில் இரத்த கண்ணீர் விடுவார். பேப்பரில் விளம்பரம் தந்து அருமை செய்யும் கார்ப்பரேட் அருமைகாரர்கள் பாரம்பரியம் உள்ள நல்ல கொங்கு குடும்பங்களுக்கு ஒத்து வர மாட்டார்கள்.
முறையாக திருமணம் செய்ய நினைக்கும் கவுண்டர்கள் வயதும் அனுபவமும் பெற்ற நல்ல அருமைகாரர்களிடம் பொறுப்பை தரவும். கார்ப்பரேட் அருமைகாரர்கள் திடீர் பணக்காரர்களுக்கும், எப்படியும் வாழலாம் என்று பணத்துக்காக பசுவை கொல்லும்-கடத்தும் மொண்ணை கவுண்டர்கள் போன்ற ஆட்களுக்கு தான் சரியாக வருவர்.
புனிதமான அருமைகாரர் பணியை தொழில் போல செய்வதையும், பாரம்பரியத்தை திரிப்பதையும் இன உணர்வுள்ள ஒரு கவுண்டனாலும் சகித்து கொள்ள முடியாது!
No comments:
Post a Comment