Sunday 22 September 2013

கொங்கு கல்யாணத்தில் பிராமணர்கள்

கொங்கு திருமணங்களில் பிராமணர்கள் இல்லை என்று ஒரு கூட்டம் (திராவிட-முற்போக்கு கும்பல்) சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. கொங்கு மக்கள் என்று கொங்கு நாட்டுக்குள் ஆட்சியமைத்தார்களோ அன்றில் இருந்தே நம்மோடு வாழ்ந்து வருபவர்கள் நம் கொங்கு பிராமணர்கள். நமக்கு குலகுருக்கலாகவும், காணி கோவில் குருக்களாகவும் இருந்து கொங்கு சமூகம் ஒழுக்கமாக வாழ நல்வழி காட்டி வந்தனர். நம் கொங்க தேச பிராமணர்கள் பலர் நமக்கு குலகுருவாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு நம் முன்னோர் செப்பேடு பட்டயங்கள் எழுதி கொடுத்து போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.

கொங்க குலகுருக்கள் பற்றி மேலும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.

கொங்கு வெள்ளாளர் திருமணத்தில் பிராமணர்கள் பங்கு குறித்து மங்கல வாழ்த்தில் குறிக்க பட்டுள்ளது.

குருக்களே அக்காலத்தில் திருமணங்களை நிச்சயித்து வந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "வேதியன் பக்கம் விரைவுடனே சென்று"என்ற வரி மூலம் உணரலாம். கொங்கர் திருமணத்தின் ஆரம்பமே இதுதான். ஏனெனில் பிரும்மச்சாரிகள் அனைவருக்கும் குருவே பொருப்பு. இதனால்தான் "பிரும்மச்சரியங்கழித்தல்" என்ற சீரும் உள்ளது.

இதேபோல் கைகோர்வை சீரின் பொழுது குருக்கள் மறைகூறி ஆசி தந்துள்ளனர். இதனை மங்கலவாழ்த்தில் "மறையோர்கள் ஆசிகூற" என்ற வரிமூலம் உணரலாம். இவ்வாறு திருமணம் நிச்சயிக்கவும், ஆசி கூறவும் செய்த குருக்களுக்கு "மங்கிலியவரி" எனும் மாங்கல்யவரியையும் செலுத்தி வந்துள்ளனர்.



மேலும் 'வேதம் ஓதிடும் வேதியர் வாழி' என்பதும் மங்கல வாழ்த்தில் வரும் வரியாகும்.

மேலும் பிராமணர்கள் கொங்கு திருமணத்தில் பங்கெடுத்ததற்கு அத்தாட்சியாக அக்காலத்தில் எழுதப்பட்ட ஒரு சமூக ஆய்வு நூலின் ஒரு பகுதியையும் இங்கு காணலாம்.


2 comments:

  1. no comments,.. but பிராமணர்கள் idaiyil vanthu otti kondanar,.. poorivega Kongu iruntha samayathil பிராமணர்கள் இல்லை,. vada naatil irunthu rajakalaal kondu varapattavargal thaan பிராமணர்கள்

    ReplyDelete
    Replies
    1. கொங்கு நாட்டுக்குள் என்று கவுண்டர்கள் வந்தார்களோ அன்றே கொங்கு பிராமணர்களும் வந்தனர்.. இது சோழர் காலத்தில் நடந்தது.. நீங்கள் சொல்லும் பிறமானர்கள் விஜய நகர காலத்தில் ஸ்ரீ சைலத்தில் இருந்து வந்தவர்கள்.. கொங்கு பிராமணர்கள் தமிழ் பிராமணர்கள்.. குருக்கள் பட்டர் நம்பி தேசிகர் போன்றோர்... திராவிட விஷ பிரசாரத்தை நம்ப வேண்டாம்..

      Delete