Sunday, 22 September 2013

தாலியின் தொண்மை வரலாறு


தாலி என்னும் வார்த்தை தாள-தாழ என்னும் சொல்லிலிருந்து வந்தது. தாளம் என்றால் பனை. 


(தாளவாடி - பனைமரங்கள் அதிகம் உள்ள பகுதி; திருப்'பனங்காடு' -தாளவனம்,தெய்வம் தாளபுரீஸ்வரர்; தாள விலாசம் என்னும் பழமையான நூல் பனையை பற்றிய செய்திகளை சொல்லும் நூல்.Toddy ~ தாடி - கள்ளு. தாடிக்கொம்பு திண்டுக்கல் அருகே
உள்ள ஊர். Talipot Palm என்று ஒரு வகை பனையை வெள்ளையர்களும் குறிக்கிறார்கள். சங்க கால கன்னட மொழியிலும் தாழம் என்றால் பனைமரமே.)பனைக்கும் தாலிக்கும் என்ன தொடர்பு?

கொங்கு திருமணம் என்பது சொந்தங்களுக்காக-ஊருக்காக செய்யபடுவது மட்டுமே அல்ல. கொங்கு நாட்டு அரசனான சேரனிடம் அங்கீகாரம் பெறவே திருமணம். கொங்க தேசத்தில் 24 நாடுகள் உண்டு. இருபத்திநாலு நாட்டுக்கும் 24 பட்டகாரர்கள் உண்டு. சேரனின் பிரதிநிதிகளாக 24 பட்டகாரரும் வந்திருந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள். இன்றும் அதன் அடையாளமாகத்தான் 24 நாட்டு கற்களை திருமண சடங்கில் வைப்பார்கள். ஒரு பட்டகாரன் வந்தாலும் அதில் ஒன்றை குறைத்து விடலாம்.

சரி, விஷயத்துக்கு வருவோம். ஒரு பனையோலையில் இன்னாருக்கு இன்னார் முன்னிலையில் திருமணம் நடந்தது என்பதை எழுதி அதில் சேரனின் பிரதிநிதிகள் கையெழுத்திடுவர். அதை மடித்து இப்போது உள்ள தாலி வடிவில் ஒரு மஞ்சள் கயிற்றில் மாப்பிள்ளை கட்டிவிடுவார். பனை ஓலை நீரில் நனைய இற்று விடுவதால் அதை பின்னர் அரக்கிலும், குயவன் செய்து தந்த தட்டானிலும் (சுட்ட மண்) செய்து பின்னர் தங்கத்திற்கு மாறினர். எனவே தாலி என்பது வெறும் திருமண அடையாளம் என்பதை தாண்டி பாரம்பரியத்தின் அடையாளம்-வரலாற்று சின்னம்-புராதனத்தின் நினைவு. நம் நாட்டின் கற்பு நெறிக்கும் 
ஒழுக்க வாழ்வுக்கும் ஒரு முத்திரை. திருமாங்கல்யம் என்பது காலத்தில் மாரியதுண்டு, ஆனால் மஞ்சள் நிற பருத்தி நூலே காலம் காலமாக திருமண அடையாளமாக இருந்து வருகிறது. பாரத நாடு முழுக்க சாமானிய குடிமகனின் மனைவி முதல் அரசனின் மனைவி வரை அனைவருக்கும் பொதுவான பெருமைமிகு மங்கள அடையாளம் தாலி. ஏன், தெய்வங்களுக்கும் இது பொருந்தும். தாலி அணியாத மணமான பெண் தெய்வம் எதுவும் கிடையாது.

பிராமணர்களும் இன்னும் சில சாதிகளும் பூநூலுக்கு பருத்தியையே பயன்படுத்துவதை போல தாலியும் பருத்தி நூலிலேயே கட்டப்படும். இது பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் தாண்டி அனைவராலும் அணிய கூடியது.

மண அடையாளம் என்பது எல்லா மதத்திலும் எல்லா நாட்டிலும் உண்டு. தாலியை மண அடையாளம் என்பதை தாண்டி பாரம்பரியத்தின்/கலாசாரத்தின் அடையாளம். தாலியை அழிக்க வேண்டுமெனில் அனைத்து புராதன சின்னங்களையும் கட்டிடங்களையும் அழிக்க வேண்டும். இதெல்லாம் பாரத பாரம்பரியத்தை அழித்து தங்கள் மதம் பரப்ப - ஆட்சியை நிறுவ வெளிநாட்டு மதமாற்ற சக்திகள் செய்யும் கட்டமைக்கப்பட்ட சதியில் ஒன்று. இதற்க்கு பெண் விடுதலை-இந்து மத எதிர்ப்பு என்ற முகமூடி மாட்டி பெண்களை ஏமாளிகள் என்று நினைத்துவிட்டனர். மெக்ஸிகோ போல நாட்டின் கலாசாரத்தை பூர்வகுடிகளை அடையாளமற்றவர்களாக்கி ஆள்வது வேரில் இருந்து விஷத்தை வைப்பது போல.

மற்றவர்களை விட, கொங்கதேச மக்களுக்கு தாலி மேல் அதிக உரிமை உண்டு. 

ஏனெனில் பனை கொங்க(சேர) தேசத்தின் தேசிய மரம்! நீர்வளம் குறைவான நம் கொங்க தேசத்தின் பெரும்பகுதிகளில் பனை மரமே தகுந்தது! எனவே பெண்ணியம் என்ற மாய வலையில் சிக்கி நம் பெருமையை நாமே அழித்துகொள்ளாமல் குலம் காக்கும் கொங்கு பெண்கள் அனைவரும் தாலியை அணிந்து வெளிநாட்டு மத மாற்றிகளின் கைக்கூலிகளான திராவிட-முற்போக்கு கிறுக்கர்கள் முகத்தில் கரி பூச வேண்டும்!

No comments:

Post a Comment